அண்ணா சாலையில் வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை அகற்றம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை நேற்று அகற்றப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹஜ்ரத் மூஸா ஷா காதரி தர்கா என்ற வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடையை நேற்று வக்பு வாரிய அதிகாரிகள் அகற்றினர். இந்த கடையை காலி செய்வதற்கு ஏற்கனவே வக்பு வாரிய அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் வக்பு வாரிய சென்னை மண்டல கண்காணிப்பாளர் ஷாகிரா பானு தலைமையிலான வக்பு வாரிய அலுவலர்கள், அதிரடியாக சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடையை அகற்றினர். கடையை அகற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட கடை உரிமையாளர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.