பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்:சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண். இவர், நேற்று முன்தினம் காலை, அவரது வீட்டிற்கு வெளியே உள்ள பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு, உடை மாற்றிய போது, யாரோ மொபைல் போனில் வீடியோ எடுப்பது போல் உணர்ந்தார்.
யார் என்று சத்தம் போட்டு, வெளியே வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார், 27, என்பவர் அங்கிருந்து ஓடி, அவரது வீட்டில் உள்ள பாத்ரூமில் பதுங்கியுள்ளார்.
இது குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.