1,000 பேருடன் மாநில ‘ ஜிம்னாஸ்டிக் ‘
சென்னை, பள்ளிக் கல்வித்துறை, சென்னை மாவட்டம் சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம், புதிய விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், 2024 – 25ம் ஆண்டிற்கான மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டி, நேற்று வேளச்சேரியில், எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் துவங்கின.’
போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, சிறுவர்களில் 600 பேரும், சிறுமியரில் 400 பேரும், உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் இரண்டு நாட்கள் மாணவியருக்கும், நாளை முதல் மாணவருக்கும் போட்டிகள் நடக்கின்றன.
இதில், தரை எக்சசைஸ், ரிதம், அக்ரோபாட்டிக் உள்ளிட்ட ஏழு வகையான போட்டிகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடக்கின்றன.