போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது
திருமங்கலம் போலீஸ் எல்லையான பாடி குப்பம் சுடுகாட்டில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கும் கும்பல் பதுங்கி இருப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, திருமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை கண்காணித்தபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்துடன் எட்டு பேர் சிக்கினர். அவர்களை சோதித்ததில், ஒன்றரை கிலோ கஞ்சா, 150 போதை மாத்திரைகள் இருந்தன.
விசாரணையில், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான கார்த்திக், 23, கிஷோர், 27, சூளைமேடை சேர்ந்த பாலாஜி, 20, வடபழநியைச் சேர்ந்த இம்ரான், 20, அசோக் நகரை சேர்ந்த ஜீவா, 25, கே.கே., நகரைச் சேர்ந்த சுரேஷ், பல்லாவரம் கோகுல், 27, விருகம்பாக்கம் பிரகாஷ், 19, ஆகியோர் என்பது தெரிந்தது.
எட்டு பேரையும் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.