பெண் ஊழியருக்கு தொல்லை நிறுவன உரிமையாளர் கைது
தாம்பரம், அழகேசன் தெருவில், ‘ரீடெக் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில், ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, 23 வயதுடைய பெண்ணிடம், அந்நிறுவனத்தின் உரிமையாளர், தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மிரட்டியதாக தெரிகிறது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான தாம்பரத்தைச் சேர்ந்த ராஜராஜன், 37, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.