‘நெ.2’க்கு வழி இல்லாமல் தவிக்கும் மீன் வியாபாரிகள்
கொட்டிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம் மீன் மார்க்கெட் கட்டுமான பணி, இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
பணி மந்தமாக நடப்பதால், 25 மீன் வியாபாரிகள், இ.சி.ஆர்., ஓரமாக கடை வைத்து உள்ளனர்.
இங்கு மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சாலையிலே வாகனங்களை நிறுத்தி செல்வதால், ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து, மீன் வியாபாரிகள் கூறியதாவது:
பழைய மீன் அங்காடி அகற்றி, புதிய கட்டடம் கட்டி ஓராண்டுக்குள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்னமும் பணிகள் முடியவில்லை
தவிர, புதிய மீன் அங்காடி, இரு தளங்களாக கட்டப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தரை தள கடைகளுக்கே அதிகம் செல்லும் வாய்ப்பு உள்ளது.
முதல் தளத்தில்ஒதுக்கப்படும் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கும்.
தவிர, வாடிக்கையாளர்கள், மீன் வியாபாரிகள், இயற்கை உபாதைகள் கழிக்க பொது கழிப்பறை கொட்டிவாக்கத்தில் இல்லை.
சம்பந்தப்பட்ட துறையினர், கட்டுமான பணிகளை முடித்து, கழிப்பறை உள்ளிட்ட வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.