மசாஜ் சென்டருக்கு ‘ சீல் ‘ வைப்பு
அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனியில் செயல்படும் தனியார் மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், அதன் உரிமையாளரான திருவொற்றியூரைச் சேர்ந்த பிரேமா, 30, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக செயல்பட்ட மசாஜ் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது