ரவுடிகள் வேட்டை ஆவடியில் தீவிரம்
அம்பத்தூர், ஆவடி அடுத்த ஆயில்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடிகள் ரெட்டைமலை சீனிவாசன், 27 ; தம்பி ஸ்டாலின், 24. இருவரும், கடந்த 18ம் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஏழு பேரை கைதாகினர். .
இரட்டை கொலையை தடுக்க தவறியதாக, பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய பூந்தமல்லியை அடுத்த சொக்க நல்லுார், சத்திரத்தை சேர்ந்த அய்யப்பன், 20, அவரது தம்பி முருகன், 19 ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார், பூந்தமல்லி அருகே நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்
இரட்டை கொலை எதிரொலியால், ஆவடி போலீஸ் ஆணையரக பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நேற்று நடந்தது.
இதில், அம்பத்துாரில் 11 பேர், தொழிற்பேட்டையில் எட்டு பேர், கொரட்டூரில் எட்டு பேர் மற்றும் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்த மேலும் ஒன்பது பேர் என, அம்பத்துார் சரகத்தில், 38 ரவுடிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
பின், பாடியைச் சேர்ந்த வினோத், 28, கலைவாணர் நகரைச் சேர்ந்த கிஷோர் குமார் 27, கொரட்டூர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 23, கமல், 19 , நவீன் குமார், 25 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீதமுள்ள, 33 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.