நடைபாதை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, அபிராமபுரம் வாரன் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து, பகுதிவாசிகள் பூங்கா அமைத்ததுடன் அவற்றை சுற்றி வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை
இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் போது, விபத்து அபாயத்தில் நடந்து செல்கின்றனர். விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– விமலா, அபிராமபுரம்.