13 நாள் ‘சரஸ் மேளா’ கண்காட்சி ரூ.1 கோடி பொருட்கள் விற்பனை
சென்னை:மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான சரஸ் மேளா விற்பனை கண்காட்சி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் டிச., 27ம் தேதி துவங்கியது.
கண்காட்சியில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், மஹாராஷ்ட்ரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள், மேற்கு வங்காளத்தின் செயற்கை பூ கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்பட்டன.
அதேபோல், கடலுார் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள் உள்ளிட்டப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 9ம் தேதி வரை, 13 நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.