வக்கீல் மற்றும் சகோதரரை தாக்கிய மூவருக்கு வலை
திருவொற்றியூர்:திருவொற்றியூர், ராஜாஜி நகர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா, 32; ஆட்டோ ஓட்டுனர். இவரது தம்பி சுகுமார், 29; வழக்கறிஞர். நேற்றிரவு ஜீவாவின் மனைவி சுபத்ராவிற்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனை செல்ல வீட்டருகே நிறுத்தியிருந்த தன் ஆட்டோவை ஜீவா எடுக்க சென்றுள்ளார்.
அப்போது, ஆட்டோவில் மூன்று பேர் படுத்திருந்தனர். அவர்களை ஜீவா எழுந்திருக்க சொல்லியுள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் கட்டையால் தாக்கியதில், ஜீவா மற்றும் சுகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காகல ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரித்து, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் தேடி வருகின்றனர்