கூடைப்பந்தில் ஐ.சி.எப். , காலனி அணிகள் அபாரம்
சென்னை, ஐ.சி.எப்., காலனி கூடைப்பந்து கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை, ஐ.சி.எப்., தெற்கு காலனி மைதானத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன
இதில், ௧0 வயது சிறுவருக்கான இறுதிப் போட்டியில், ஐ.சி.எப்., காலனி கிளப், 25 – 12 என்ற கணக்கில், ஆர்.எம்.கே., பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.
சிறுமியரில், ஐ.சி.எப்., காலனி கிளப், 24 – 12 என்ற கணக்கில், பெரம்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.
அதே போல், 12 வயது சிறுவரில், ஐ.சி.எப்., காலனி கிளப், 29 – 26 என்ற கணக்கில், ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளியை தோற்கடித்து, முதலிடத்தை கைப்பற்றியது.