கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ.3 லட்சம் காப்பர் திருட்டு
பெரம்பூர், ஜன.12: கொடுங்கையூர் குப்பை கிடங்கில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதமாக பயோ மைனிங் முறையில் குப்பையை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் ராமஜெயம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.