‘காசா கிராண்ட் ‘ நிறுவனம் 19 மாடி குடியிருப்பு அறிவிப்பு
சென்னை, சென்னை, பல்லாவரம் அடுத்த திருமுடிவாக்கம் பிரதான சாலையில், ‘காசா கிராண்ட் மேடலின்’ என்ற புதிய திட்டத்தை, காசா கிராண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
திருமுடிவாக்கம் பிரதான சாலையில், 6.4 ஏக்கர் நிலத்தில், முதல் முறையாக, 19 மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. மக்களின் தற்கால விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நேர்த்தியான வடிவமைப்பில் 394 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இந்த வீடுகள் அனைத்தும், விசாலமான, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறை வசதி உடையவை.
இந்த வளாகத்தில், 80க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகள் மற்றும், 5.7 ஏக்கர் திறந்தவெளி பரப்பு இருக்கும். இதில், பழத்தோட்டங்கள், அல்லிக்குளம், தேக்கு மரத்தோப்பு, மூலிகை மற்றும் வாசனை பயிர் தோட்டம் இடம்பெற்றிருக்கும்.
வெளிவட்ட சாலைக்கும், ஜி.எஸ்.டி., சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில், இத்திட்டம் அமைந்திருப்பதால், தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், அலுவலக வளாகங்கள் ஆகிவற்றுக்கு எளிதில் சென்று வரலாம்.
ஒரு சதுர அடி, 3,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தில் வீடு வாங்க விரும்புவோர், அதன் விலையில், 10 சதவீத தொகையை மட்டும் இப்போது செலுத்தினால் போதும். மீதி தொகையை, வீட்டை ஒப்படைக்கும்போது தரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.