சென்னை: புகார் பெட்டி; எங்க ஏரியாவுக்கும் வாங்க அமைச்சரே!
‘சென்னையில் நானும் பல இடங்களில் சுற்றிப்பார்க்கிறேன்; சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கவில்லை. எங்கு பாதிப்பு என குறிப்பிட்டு சொன்னால், அதை உடனடியாக சரி செய்வோம். மழைக்காரணமாக தடை செய்யப்பட்ட சாலை உள்ளிட்ட பணிகளுக்கு மீண்டும் அனுமதி தரப்பட்டுள்ளது’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
முதல்வர் தொகுதிக்குட்பட்ட கொளத்துார், விவேகானந்தர் நகர் சாலை, கடப்பா சாலை, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்ஹீல்ஸ் வில்லிவாக்கம் சாலைகள் எல்லாம் பல்லாங்குழியாகவும், மாடர்ன் ஆர்ட் ஓவியம் போலவும், சபரிமலை பாதை போல கரடுமுரடாகவும் காட்சியளிக்கின்றன. இப்பகுதியில் சென்று வருவதால், முதுகுதண்டு வடம் பாதிக்கும் நிலைமையில் உள்ளது.
இதை வந்து பாருங்கள் அமைச்சரே; சரிசெய்வது மட்டுமின்றி, உடனே அடுத்த துறையை வைத்து தோண்டிவிடக்கூடாது.
– சக்கரவர்த்தி,
சமூக ஆர்வலர்,
எழும்பூர்.