ெஷனாய் நகரில் 5 விளையாட்டு அரங்கங்களுடன் பிரமாண்ட வளாகம் ரூ.8.87 கோடியில் தயாராகிறது

அண்ணா நகர்:அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை கஜலட்சுமி காலனி முதல் பிரதான சாலையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக காலி இடம் உள்ளது. இந்த மனையில், 500க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள் வளர்ந்து, சிறிய காடுபோல் காட்சியளித்தது. இது குறித்து நம் நாளிதழில், பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்பின், கருவேல மரங்களை அகற்றப்பட்டன. அந்த இடத்தை பகுதி சிறுவர்கள், விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். காலி இடத்தை, சிறுவர்கள் மைதானமாக மாற்ற, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. அதற்காக, 2,652 சதுர பரப்பளவில், 8.87 கோடி ரூபாய் செலவில், கேலரியுடன் ஐந்து விளையாட்டு அரங்கங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு, கேலரியுடன் கால்பந்து, இரண்டு புட்சல் அரங்கம், வாலிபால் மைதானம், கூடைப்பந்து அரங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் உள்ள காலி இடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மாற்றும் பணியில் சி.எம்.டி.ஏ., ஈடுபடுகிறது. அதன்படி, ெஷனாய் நகரில் உள்ள காலி மனையில், பல வசதிகளுடன் கூடிய ஐந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அதேபோல், திருமங்கலத்தில் உள்ள ஒ.எஸ்.ஆர்., எனும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்திலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கைகள் தயாராகிறது. ஏற்கனவே, ெஷனாய் நகரில், அரசின் நீச்சல் குளம், ஸ்கேட்டிங் பார்க், மெட்ரோவின் பிரமாண்டமான பூங்கா உள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் பயனபாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

கூடுதல் வசதிகள்

 

* ‘ஜிம்’ மற்றும் அட்மின் அலுவலகம்* ஷவர், உடை மாற்றும் அறைகள்

* இருபாலருக்கு கழிப்பறைகள்* மாற்றுத்திறனாளகளுக்கு கழிப்பறை

* பாக்கிங்: 17 கார்கள், 113 பைக்* நடைபயிற்சி ‘டிராக்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *