மிதிவண்டி போட்டி ஒத்திவைப்பு
சென்னை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு, 2024 – 25ம் ஆண்டிற்கான, ‘அண்ணா மிதிவண்டி போட்டி’ நாளை காலை 5:30 மணிக்கு நடக்க இருந்தது. இப்போட்டி சில காரணங்களுக்காக, பிப்., 1ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க, நாட்டில் தயாரான மிதிவண்டி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முன்பதிவு செய்யாமல் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள முடியாது. மேலும் விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், நாளை மறுநாள் நடக்க இருந்த, அண்ணா மாரத்தான் போட்டி, பிப்., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.