இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆண்டு விழா
சென்னை: இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைப்பின் 75வது ஆண்டு விழா சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று நடந்தது.
சென்னை இயக்குனர் ஸ்ரீமதி ஜீபவாணி, தெற்கு மண்டல தலைவர் மீனாட்சி கணேசன் முன்னிலை வகித்தனர். தொழில் துறை ஆணையர் மற்றும் குறு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இயக்குனர் நிர்மல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: கார்பன் மாசு இல்லாத வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
ஒழுங்குமுறை போன்ற கொள்கைகள் தொடர்பான சிக்கல்களை பற்றியும் அத்தகை வழிமுறைகளை எதிர்கொள்ளவும் பிரச்னைகளை சமாளிக்கவும் தொழிற்சாலைகள் தயாராக இருக்க வேண்டும். காடுகளை அழித்தும், அதன் மூலம் செய்யும் உற்பத்திகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தோல் உற்பத்தியிலும் தரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.