எழும்பூரில் ரூ.227 கோடியில் ஒருங்கிணைந்த பெரு வளாகம்
சென்னை: எழும்பூரில் ரூ.227 கோடியில் ஒருங்கிணைந்த பெருவளாகம் அமைக்கப்பட்டு வருகிறது என ஆளுநரை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரை உரையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கைத்தறி துறையை மேம்படுத்துவதற்கு பல சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றம் மரபினை பாதுகாத்து தேசிய அளவில் முன்னிலைப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த பெருவளாகம், எழும்பூர் கைத்தறி வளாகத்தில் 4.5 லட்சம் சதுரடி பரப்பளவில் ரூ.227 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. நூற்பு துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் வகையில் நூற்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.500 கோடியில் 6 சதவீத வட்டி மானியம் வழங்கும் மாநில அரசின் முன்னோடி திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்முயற்சிகள் இத்துறையை நவீனமயமாக்கி அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டிட உதவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.