கூட்டுறவுத்துறை வணிக வளாகம் ரூ.500 கோடி உதவி கேட்பு
சென்னை,கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், ‘நபார்டு’ எனும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் வாங்கி, பயிர் கடன் வழங்குதல், கிடங்கு கட்டுதல், புதிய தொழில் துவங்குதல் என, பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.
வடபழனியில் காலியாக உள்ள இடத்தில், பல தளங்களுடன் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டுவதற்கு, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள, நபார்டு வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் கடன் கேட்கப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கு ஒப்புதல் கிடைத்ததும், வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகளை முழுவீச்சில் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.