மறைந்த ‘டிவி’ நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை

திருவான்மியூர், சின்னத்திரை நடிகை சித்ரா, 2020, டிசம்பரில், திருவள்ளூர், நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார்.

தற்கொலைக்கு துாண்டியதாக, இவரதுகணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பின், உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை என, கடந்த ஆகஸ்ட் மாதம், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

சித்ராவின் தந்தை ஓய்வுபெற்ற காவலர் காமராஜ், 64. திருவான்மியூர், ராஜாஜி நகரில் வசித்து வந்தார். மகள் மரணத்திற்கு பின், மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *