தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தண்டையார்பேட்டை,பாலியல் புகாரில் சிக்கிய தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசனை கைது செய்யாததை கண்டித்து, வடசென்னை வடகிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்து, பின் விடுவித்தனர்.