டான்சரின் காரை சேதப்படுத்திய வாலிபர் கைது
தேனாம்பேட்டை,தேனாம்பேட்டை, திரு.வி.க., குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார், 46; சினிமா நடன கலைஞர். பகுதி நேரமாக தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு விஜயராகவா சாலை – திரு.வி.க., குடியிருப்பு சந்திப்பு அருகே காரை ஓட்டிச் சென்றார். அப்போது, சாலை நடுவே வழிவிடாமல் நின்றிருந்தவரை வழி விடச் செய்யும் விதமாக ஹார்ன் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரம்அடைந்த நபர், விஜயகுமாரை தாக்கியதுடன், கல்லால் அடித்து காரை சேதப்படுத்திச் சென்றார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன், 36, என்பவரை நேற்று கைது செய்தனர்.