சென்னை மாநகராட்சியில் 35% தொழில் வரி உயர்வு: அமலுக்கு வந்தது

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. அதன்படி, 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.135ல் இருந்து ரூ.180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315ல் இருந்து ரூ.425ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு ரூ.630 கட்டியவர்கள் இனி ரூ.850 கட்ட வேண்டும்.

அதேப்போல ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690க்கு பதில் ரூ.930 கட்ட வேண்டும். ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும். அவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை. இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *