மினி பஸ்சை புரட்டி போட்ட ‘சாலை’ கார்ட்டூன் உள்ளது
ஈஞ்சம்பாக்கம்:மயிலாப்பூர் அடுத்த மந்தைவெளியைச் சேர்ந்த குடும்பத்தினர், 20 பேர், சிதம்பரம் கோவிலுக்கு சிற்றுந்தில் சென்றனர். பின், அங்கிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.
சென்னை, சோழிங்கநல்லுார் அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வந்தபோது, திடீரென குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க, சிற்றுந்து ஓட்டுனர் ரூபன், 36, ‘பிரேக்’ பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து, கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.
இதில், சிற்றுந்தில் இருந்த முதியவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.