குழந்தைகளின் கழுத்து அறுத்த தாய் கைது
கீழ்ப்பாக்கம்:பெருங்கொளத்துாரைச் சேர்ந்தவர் ராம்குமார், 34. இவரது மனைவி திவ்யா, 32. இவர்களது லக்சன் குமார், 4, புனித்குமார், 1, என இரு குழந்தைகள் இருந்தனர். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்றரை மாதமாக திவ்யா குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்த திவ்யா, கடந்த 21ம் தேதி காய்கறி வெட்டும் கத்தியால், புனித்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின், லக்சன் குமாரையும் கழுத்தை அறுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த திவ்யா, உடல்நலம் தேறியதால், கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை கைது செய்தனர்.