மேம்பால சுவரில் மோதி எலக்ட்ரீசியன் பலி
கிண்டி, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் தீனதயாளன், 25; எலக்ட்ரீசியன். இவர், தன் நண்பர் விஜய், 26, என்பவருடன், நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி நோக்கி, டூ – வீலரில் சென்றார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூ – வீலர், அடையாறு கல்லாற்று மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.
இதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த விஜய் கிண்டி நுாற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீனதயாளன் உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.