ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் ரூ.3,657 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மூன்று வழித்தடங்களில், 138 ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை, 3,657.53 கோடியில் தயாரிக்க, பி.இ.எம்.எல்., நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
சி.எம்.ஆர்.எல்., நிர்வாக இயக்குனர் சித்திக் முன்னிலையில், அதன் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவன இயக்குனர் ராஜிவ்குமார் குப்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஒப்பந்தம் வாயிலாக, ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் வடிவமைப்பு முதல் செயல்பாடு வரை, 15 ஆண்டுகளுக்கு முழுமையான பராமரிப்பும் அடங்கும்.
முதல் மெட்ரோ ரயில், 2026ல் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும், 2027 மார்ச் முதல் 2029 ஏப்ரல் வரை, ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.