மாமூல் கேட்டு மிரட்டிய நான்கு பேர் சிக்கினர்
திரு.வி.க. நகர்,:திரு.வி.க., நகர், கே.சி., கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சோலைச் செல்வம், 39; மளிகை கடை உரிமையாளர். நேற்று காலை, இவரது கடைக்கு சென்ற நான்கு பேர், கத்திமுனையில் மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர்.
பணம் இல்லை என்று கூறியதற்கு, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், மாமூல் கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது, கொளத்துார், சத்திய சாய் நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 39, திருமங்கலத்தைச் சேர்ந்த ஹேம்நாத் குமார், 31, அண்ணா நகரைச் சேர்ந்த ஹரிஷ், 42, ராஜேஷ், 26, என தெரிந்தது.
போலீசார், நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இதில், பிரேம்குமார் மீது சென்னையில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.