டீக்கடையில் 300 பாக்கெட் குட்கா பறிமுதல்
அயனாவரம்:அயனாவரம் பேருந்து நிலையம் எதிரே ஆண்டர்சன் தெருவில், டீக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் விற்பனை நடப்பதாக, ஓட்டேரி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசாரின் சோதனையில், 300 பாக்கெட் குட்கா பொருள் சிக்கின.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டேரி, பாஷயம் 2வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித் குமார், 38, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.