போட்டோ பினாலேவின் புகைப்படக் கண்காட்சி
சென்னை:பெண் புகைப்படக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ‘போட்டோ பினாலே’ என்ற அமைப்பு, சென்னை லலித் கலா அகாடமியில், புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறது.
கண்காட்சியில் இந்தியாவில் உள்ள பெண் புகைப்படக்கலைஞர்கள் மட்டுமின்றி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, லண்டன், பிரான்ஸ், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளில், சமூகம் சார்ந்து இயங்கக்கூடிய பெண் புகைப்படக் கலைஞர்கள், தாங்கள் பார்த்த, பெண்கள் சார்ந்த விஷயங்களை படமாக்கியுள்ளனர்.
இந்த படங்களில் பெரும்பாலானவை, உழைக்கும் ஏழை எளிய, விவசாயம் சார்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். புகைப்படக்கருவி இல்லாத காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை, ‘ஏஐ’ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கிய ஒரு சில புகைப்படங்களும் காட்சிக்கு உள்ளன.
கண்காட்சியில், 21 பெண் புகைப்படக் கலைஞர்களின், 500க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி மார்ச் 16 வரை நடைபெறும்; அனுமதி இலவசம்.