ஜல்லி கொட்டி நாளாச்சு! சாலை போடுவது எப்போது?
எண்ணுார்:ஜல்லிக் கற்கள் கொட்டி 10 நாட்களுக்கு மேலாகியும், சாலை போட மாநகராட்சி ஆர்வம் காட்டதாதால், பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.
திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டு, எண்ணுார் நேதாஜி நகரில், 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 8 தெருக்களில் சாலை அமைக்கும் பணிக்காக, ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன.
ஜல்லிக் கற்கள் கொட்டி, 10 நாட்களுக்கு மேலாகியும், அவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முதியோர் நடந்து செல்லும் போது, பாதங்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. பைக், ஸ்கூட்டர் ஓட்டி செல்பவர்கள் சட்டென பிறண்டு விழுந்து காயமுறுகின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சாலை அமைக்கும் பணியை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, அலட்சியம் காட்டுவது விபத்துக்கு வழிவகுத்து விடும் எனவும், அவர்கள் எச்சரிக்கின்றனர்.