வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை
தாம்பரம், வண்டலுார் பூங்காவில் டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காணும் பொங்கலன்று, வண்டலுார் பூங்காவிற்கு 23,000 பேர் மட்டுமே வந்தனர்.
கடந்த காலங்களை பொறுத்தவரையில் இது மிகவும் குறைவு. இந்த காணும் பொங்கலன்று வரும் மக்கள் கூட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன், நேற்று முன்தினம், பூங்கா அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
வனம், வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.