3வது நாளாக போராட்டம் மக்கள் அவதி
கொருக்குப்பேட்டை,பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அம்பேத்கரை ஒருமையில் பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நாடு முழுதும் போராட்டம் நடக்கிறது.
தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், வி.சி., கட்சி சார்பில், வடசென்னை மாவட்ட செயலர் சவுந்தர் தலைமையில், கொருக்குப்பேட்டை மற்றும் ராயபுரம் ரயில் நிலையத்தில், ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தண்டவாளத்தில் அமர்ந்து அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணியர் அவதிக்குள்ளாகினர். போராட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.