குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவிட்டவர் கைது
சென்னை,சென்னை, மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த, 4ம் தேதி, புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில், ‘சிக்னல் என்ற மொபைல் செயலியில் குழுக்களை ஆரம்பித்து, குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுகின்றனர்’ என குறிப்பிட்டிருந்தது.
இது குறி த்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில், தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி, 22, என்பவர், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை ‘சிக்னல்’ செயலியில் பதிவிறக்கம் செய்து, எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.
கடந்த, 10ம் தேதி வெங்கா ரகுநாத் ரெட்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி, 23, என்பவரை, சைபர் கிரைம் போலீசார், நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.