ஆட்டோ திருட்டு சகோதரர்கள் கைது
மடிப்பாக்கம்,மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், மதியழகன் தெருவை சேர்ந்தவர் மாபாஷா, 41. பயணியர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஒட்டி வருகிறார்
கடந்த 17ம் தேதி இரவு, வீட்டின் அருகே, சாலையோரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். பின், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை
இதுகுறித்து, மாபாஷா அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார், சிசிடிவி’ கேமரா பதிவுகளை வைத்து, ஆய்வு செய்தனர். அப்போது, இருவர் சேர்ந்து ஆட்டோவை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில், தாம்பரம்அடுத்த படப்பை, ஆரம்பாக்கத்தை சேர்ந்த ஹேமந்த், 25, மற்றும் அவரின் தம்பி ஜெகதீஷ், 21, இருவரும், ஆட்டோவை திருடியது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டோவையும் மீட்டனர். பின், இருவரையும், நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.