முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் நகரில் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.

இதேபோல் பாலதண்டபாணி கோவில் கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தா.பழூர்

தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர், உற்சவரான வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது.

இதேபோல் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலிக்கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *