ஆஸ்துமா, அலர்ஜிக்கு மூலிகை சாறு சிகிச்சை
சென்னை, வடபழனி ஆர்.எஸ்.வேலுமணி சித்தா ஆயுர்வேதா மருத்துவமனையில், ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் பிரச்னைக்கு மூலிகை சாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து, மருத்துவமனையின் டாக்டர் எஸ்.ஆனந்தி பிரபா கூறியதாவது:
ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், மூக்கில் சதை வளர்ச்சி, நுரையீரல் கோளாறுகளுக்கு மூலிகை சாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சை பெற்றவர்களுக்கு நிரந்தர தீர்வாக உள்ளது.
எங்களது மூலிகை சாறு சிகிச்சையில், நுரையீரல், சைனஸ், தலை பகுதியில் உள்ள நீர் மற்றும் சளி வெளியேறுகிறது. நுரையீரலில் உள்ள சுவாசக்குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை சீர்அடைக்கிறது.
மூக்கில் நீர் வடிதல், இளைப்பு, இருமல், தலைவலி, தும்மல், கண் நமைச்சல், மூக்கடைப்பு, சோர்வு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்டவைக்கு, ஒரு வார சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்கிறது.
தொடர்ந்து, மூன்று மாதம் சிகிச்சை பெறுவோருக்கு, நோய்களை இயற்கையாகவே எதிர்கொண்டு சரி செய்யக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், நிரந்தர தீர்வாக உள்ளது.
இங்கு, ஒரு மாத சிகிச்சைக்கு, 3,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.