ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வை வழங்க கோரியும், பணப்பலன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை பல்லவன் இல்லம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்கள் அவ்வப்போது ஆடைகளை களைய முயன்றபோது, ஓய்வூதியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதியம் 3:00 மணிக்கு மேலாகியும் பேச்சு நடத்த, அதிகாரிகள் அழைக்காத நிலையில், ஓய்வூதியர்கள் அனைவரும் மேலாடையை களைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.