கருணாநிதி நுாற்றாண்டு கிண்டியில் நினைவு துாண்
சென்னை, விரிவாக்கத்திற்கு முன், சென்னையின் நுழைவாயிலாக கிண்டி இருந்தது.
இங்கு, ரயில் நிலையம், பேருந்து நிலையம், பல்நோக்கு மருத்துவமனை, தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. கிண்டியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் ஆலந்துார் சாலை துவங்கும் இடத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவை போற்றும் வகையில், நினைவு துாண் அமைக்கப்பட உள்ளது.