சென்னை – பாங்காக் புது விமான சேவை துவக்கம்

சென்னை, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு பல்வேறு விமான நிறுவனங்கள் தினசரி நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும், சுற்றுலா வணிகம் செல்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், கூடுதலாக விமான சேவை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று ‘தாய் லயன் ஏர்’ விமான நிறுவனம் சென்னை- தாய்லாந்து இடையேயான நேரடி விமான சேவையை நேற்று முதல் துவக்கியது.

இந்த விமானம், தற்போது வாரத்தில் திங்கள், புதன்,வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இயக்கபடுகிறது. பயணியரின் வரவேற்பு மற்றும் புக்கிங் பொருத்து, தினசரி சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *