பொது செம் பரம் பாக்கம் நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு
குன்றத்துார்:சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு, 3.64 டி.எம்.சி. உயரம் 24 அடி. சமீபத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஏரி நிரம்பியது. அதிகாரிகள் தொடர்ந்து ஏரியை கண்காணித்து வந்தனர். மேலும், கடந்த மூன்று தினங்களாக, வினாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
மழை நின்றதால், தற்போது ஏரியின் நீர் மட்டம் குறைய துவங்கி உள்ளது. இதையடுத்து, நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, நீர் திறப்பு 6,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.76 அடியும், கொள்ளளவு 3.05 டி.எம்.சி.,யும், நீர் வரத்து வினாடிக்கு 2,240 கன அடியாக இருந்தது.