பூங்கா ஜன்னல் கம்பியில் சிக்கிய சிறுமியின் தலை
அண்ணா நகர்,:அண்ணா நகர் 3வது பிரதான சாலையில், 15.5 ஏக்கர் பரப்பளவில், அண்ணா ‘டவர்’ பூங்கா எனும் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா உள்ளது. இங்கு, தினம் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
நேற்று விடுமுறை என்பதால், குடும்பத்தினருடன் வந்த ஒரு சிறுமி, டவர் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தார்.
அங்கிருந்த தடுப்பு ஜன்னல் கம்பியில், சிறுமியின் தலை சிக்கிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல், வலியால் துடித்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர், அங்கிருந்தோர் முயற்சி செய்தனர். பின், வாலிபர் ஒருவர் வந்து, சிறுமியின் தலையை லாவகமாக எடுத்தார்.