கோயம்பேடு பஸ் நிலையத்தில் சிக்கிய ‘போதை’ வியாபாரிகள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 3 கிராம் எடையிலான மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, போதைப் பொருள் வைத்திருந்த, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தொல்காப்பியன், 20, அசோக் நகரைச் சேர்ந்த கார்த்திக்கேயா, 24, ஆகிய இருவரையும் கைது செய்து, 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஐ – போன் உட்பட இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் அளித்த தகவலின் படி ேமலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.