‘ரேபிடோ’ ஓட்டுனரை தாக்கி வழிப்பறி செய்த மூவர் கைது
பரங்கிமலை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் முத்து, 25. இவர், ‘ரேபிடோ’ பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் பரங்கிமலை பகுதியில் அழைப்பு வந்தது. அங்கிருந்து அசோக்பில்லர் பகுதிக்கு சவாரி செல்ல வேண்டும் என அழைத்துள்ளார்.
அந்த நபரை அழைத்துக் கொண்டு, ஈக்காட்டுத்தாங்கல் ஒலிம்பியாடெக் பார்க் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சவாரிக்கு வந்தவர் பைக்கை நிறுத்த கூறினார். அவர் நிறுத்தியதும், அருகில் நின்றிருந்த இருவர் வந்தனர். மூவரும் முத்துவை தாக்கி, அவரிடம் இருந்த மொபைல் போன், பணம் மற்றும் பைக்கை பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆலந்துாரைச் சேர்ந்த ஆதவன், 22, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், 25, பரங்கிமலையைச் சேர்ந்த தினேஷ், 23, என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் வாகனத்தை மீட்டனர்.