குடிநீரில் கழிவுநீர் அமைச்சர் மீது புகார்
பல்லாவரம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதசுப்பிரமணியம், பல்லாவரம் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
கடந்த 5ம் தேதி, பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டு, 60 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; 3 பேர் இறந்தனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த அமைச்சர் அன்பரசன், ‘குடிநீர் பிரச்னை இல்லை என்றும், உணவால் தான் பிரச்னை’ என்றும், பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார்.
பொய்யான வதந்தியை பரப்பி, பொதுமக்கள் உயிருக்கு அபாயம் ஏற்படுத்திய அமைச்சர் அன்பரசன், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.