மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர், வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து, உயர் கோபுரங்கள் வழியாக, உயர் மின் அழுத்தக் கம்பிகள், மணலி, மாதவரம் போன்ற பகுதிகள் வரை செல்கிறது.
தொடர் மழை காரணமாக, நேற்று காலை, மணலி விரைவு சாலை – சாத்தாங்காடு காவல் நிலையம் எதிரே, இரு உயர்மின் கோபுரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், மின்கம்பி அறுந்து விழுந்தது.
மணலி விரைவு சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எண்ணுார் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து, அறுந்து விழுந்த மின்கம்பியை துண்டித்து அகற்றினர்.
ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது. அறுந்து விழுந்தது, ‘எர்த் கம்பி’ என்று மின்வாரிய ஊழியர்கள் கூறினர்.