ரஷ்ய படம் 3 நாள் இலவசமாக பார்க்கலாம்

சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில், இன்று முதல் 14ம் தேதி வரை, மாலை 6:00 மணிக்கு, ஆங்கில வரி விளக்கத்துடன் ரஷ்ய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இன்று, சன் ஆப் ரிச் என்ற நகைச்சுவை திரைப்படமும், நாளை செபி; மை பிளபி பிரண்ட் என்ற சாகச திரைப்படமும், 14ம் தேதியான நாளை மறுநாள், கெஸ்ட் பிரம் தி பியூச்சர் என்ற டைம் டிராவல் எனும் காலச்சக்கரம் சார்ந்த சாகசப்படமும் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களை காண அனுமதி இலவசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *