13 விமான சேவை சென்னை ஏர்போர்ட்டில் ரத்து
சென்னை, சென்னையில் இருந்து காலை, 6:30 மணிக்கு கொச்சி செல்லும் விமானம், 10:45 மணி திருவனந்தபுரம் விமானம், 10:50 மணி சிவமுகா விமானம், 12:00 மணி மதுரை விமானம், 12:35 மணி சிலிகுரி விமானம், மதியம் 1:55 மணி இலங்கை யாழ்ப்பாணம் விமானம் ஆகிய, 7 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், காலை 10:20 மணிக்கு சென்னை வரும் கொச்சி விமானம், மதியம் 1:45 மணி திருவனந்தபுரம் விமானம், மாலை 3:00 மணி மதுரை விமானம், மாலை 5:10 மணி யாழ்ப்பாணம் விமானம், 5:55 மணி சிவமுகா விமானம், இரவு 10:05 மணி கோல்கட்டா விமானம் உள்ளிட்ட, 6 வருகை விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் செல்லும் விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு காலை 10:40 மணிக்கு வரும் ஏர்இந்தியா விமானம், பகல் 12:00 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதில், 160 பேர் பயணம் செய்ய இருந்தனர். விமானம் புறப்படும் முன் சோதனை செய்யப்படும் சோதனையின்போது, வால்வு பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பயணியர் சிரமப்பட்டனர்.
டில்லியில் இருந்து சென்னை புறப்பட்ட ‘இண்டிகோ’ விமானம், நேற்று காலை 10:00 மணிக்கு சென்னை வான்வெளியை வந்தடைந்தது. மோசமான வானிலை காரணமாக, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. வானிலை சீரானதும் மீண்டும் சென்னை திரும்பியது.