இ. எஸ். ஐ.சி. , குறைதீர் முகாம்

சென்னை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின், சென்னை மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிக்கையாளர்களின் குறைதீர் முகாம், நாளை மதியம் 2:30 மணிக்கு நடக்க உள்ளது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம், 143, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை — 34, என்ற முகவரியில் உள்ளது.

இங்கு, நாளை மதியம் 2:30 மணிக்கு ‘சுவிதா சமகம்’ திட்டத்தின்படி, தொழில் முனைவோர், ஊழியர்கள், காப்பீட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இ.எஸ்.ஐ., பயனாளிகளுக்குகான குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.

பயனாளிகள், தங்கள் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *